எமது தாயகத்தின் வீறு கொண்ட விடுதலை பயணத்தில் நாமும் தடம் பதிக்க நினைத்து இணையம் எனும் தொழில்நுட்பத்துடன் தங்களை தொடர்பு கொள்ள விளைகிறோம். இந்த பூமிப்பந்து தமிழன் என்றே எம்மை அடையாளப்படுத்துகிறது. புலத்தில் நாம் எங்கு வாழ்ந்தாலும் தமிழன் என்றே அழைக்கப்படுகிறோம். அந்த வகையில் எம் இனத்திற்கான தன்மானத்தையும் தனித்துவத்தையும் பேணுதல் என்பது எமக்கான கடமையாகிறது. அத்துடன் அடக்கப்பட்டு அடையாளத்தை இழக்கும் நிலையிலிருந்து விடுபடவும் எம்மை தக்கவைத்துக்கொள்ளவும் நாம் போராட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம். ஏதிரியானவன் எம் இனத்தின் மீது தொடுத்துள்ள போர்களில் இன்று புலத்தை பெரிதும் பாதிப்பது உலவியல் போராகும். எனவே இவ் உலவியல் போருக்கு ஈடுகொடுக்க எமக்கான சரியான செய்திப்பரிமாற்றதின் அவசியத்தில் விளைந்ததே இவ் இணையதளம். எனவே நாம் எந்தவித வணிக நோக்கங்களுமின்றி எம் இனத்தின் இருப்பிற்கான ஆயதமாகவே இவ் இணையத்தை தங்கள் முன் அறிமுகப்படுத்துகிறோம்.
புலத்திலிருந்து புதியவன்!














