அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களினா லேயே சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஐ.நாவின் நிபுணர் குழு அமைப்புக்கும் ஐ.தே.க. கண்டித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சி எதிர்ப்புத் தெரிவிப்பதாக கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் தயா சிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஏனைய தரப்பினர் மீது குற் றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடவும், தமது பிழைகளை திருத்திக்கொள்ள முனைப் புக் காட்ட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் சில செயற்பாடுகளின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ள தாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஐ.நா. தலைமைச் செயலர் இலங்கையில் போர்க்காலத்தில் இடம் பெற்ற தாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமக்கு ஆலோசனைகளை கூறு வதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நிய மிக்கப்போவதாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் கூறியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக் வுடன் தான் நடத்திய தொலைபேசி உரையா டலின் போது இதனைத்தான் மகிந்த ராஜபக் விடம் வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
உள்ளூரில் இடம் பெயர்ந்த மக்களின் நடமாட்டம் மற்றும் அவர்களது நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காணுவது ஒரு அரசியல் நல்லிணக்கத்தை காணுவது மற்றும் நடந்த நிகழ்வுகளுக்கான பொறுப்புக் கூறும் நிலைமையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்றத்தைக்காணுவது ஆகியவை தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசியதாகவும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.














