ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானி கராலயத்தின் நிதியில் திருகோணமலையில் இயங்கிவந்த சர்வதேச குடியேற்ற அலுவலகம் நேற்று மூடப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து நடத்துவதற்கு உரிய நிதி வசதி இல்லாமல் இருப்பதே இவ் மூடுவிழாவுக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்ற போதிலும் உண்மைக் காரணங்கள் எவையும் கூறப்படவில்லை.
இன்றைய யுத்தமற்ற சூழலில் இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் குறைந்து விட்டதால் இதைத் தொடர்ந்து நடத்துவதற்கான நிதியை வழங்கு வதில்லை என்கிற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் எடுத்திருக்கிறது. இந்த அலுவலகத்தில் 17 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர் என்றும் அவர்கள் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் என்றும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றனர்














