ஈழத் தமிழர்கள் உட்பட சுமார் 200 இற்கும் அதிகமானவர்களுடன் வந்து கொண்டிருக்கும் தாய்லாந்து சரக்குக் கப்பலான எம்.சீ.சன்.சீ கனேடிய கடலை அடைந்ததும் முற்றுகையிடப்படும் என்று கனேடிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் மைக்கேய் இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக தெரிவித்தவை வருமாறு:-
”நாம் இந்தக் கப்பலைக் கண்காணித்து வருகின்றோம். அக்கப்பல் கனேடிய கடலை வந்து அடையட்டும். எமது கப்பல்கள் அதை முற்றுகையிடும்.அக்கப்பலின் நகர்வுகள் குறித்து எம்மிடம் தகவல்கள் உள்ளன.
அத்தகவல்களின்படி எமது முற்றுகை சரியாக நடத்தி முடிக்கப்படும். இப்பயணிகள் கடலில் பல மாதங்களால பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் யாராவது ஒருவேளை சுகவீனம் அடைந்திருக்கலாம். ஆகவே கனடாவின் சுகாதார மற்றும் மருத்துவப் பிரிவினரும் தயார் நிலையில் உள்ளார்கள்.”















