கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் இன்று காலை ‘கராஜ்’ ஒன்றில் ஏற்பட்ட தீயினால் இரு கார்கள் கடும் சேதங்களுக்குள்ளாகின.
இயந்திரமொன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறினால் இத்தீவிபத்து ஏற்பட்டதாக கொழும்பு தீயணைப்புப் படைப்பிரிவு அதிகாரி பி.ஏ.ஏ. ஆரியரட்ண டெய்லி மிரருக்குத் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.















