மூளை செயலிழந்து உயிரிழந்த தமிழ் இளைஞன் ஒருவரின் சிறுநீரகத்தை இரண்டு சிங்கள நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யும் சத்திர சிகிச்சை கண்டி பொது வைத்தியசாலை வெற்றிகரமான முறையில் இடம்பெற்றது.
சிறுநீரகத்துக்குரிய தமிழ் இளைஞன் விபத்துக்குள்ளாகி, கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சிறுநீரக மாற்றுச் சிகிச்சை இடம்பெற்றது.
இந்த சிறுநீரக மாற்று சிகிச்சையை கண்டி பொது வைத்தியசாலையின் சிறுநீரக மாற்று பிரிவு வைத்திய நிபுணர் பி.கே ஹரிசந்திர தலைமையிலான குழு மேற்கொண்டது.
சிறுநீரகம் மாற்றீடு செய்யப்பட இரண்டு நோயாளிகளும் தேறி வருகின்றனர் என வைத்திய கலாநிதி பி.கே ஹரிசந்திர தெரிவித்தார். இரண்டு சிறுநீரகங்களையும் வழங்கியவர் கண்டியைச் சேர்ந்த எம்.யோகராஜன் ஆவார்.
மகன் உயிர் பிழைக்கமாட்டார் என்று கேள்விப்பட்டமையுடன் யோகராஜனின் தாய் மகனின் இரண்டு சிறுநீரகங்களையும் நன்கொடை செய்ய உள்ளாரென வைத்தியர்களிடம் அறிவித்திருந்தார்.














